Friday, 7 November 2025

எண்ணும் எழுத்தும் AIயும் - 1

கணிதமும், இயற்பியலும் நான் விரும்பி படித்த பாடங்கள். வெறும் பாட புத்தகம் மற்றும் படிக்காமல் அதை மேலும் தெரிந்து கொள்வதற்காக அவை தொடர்பான மற்ற புத்தகங்களையும் வாசிப்பேன். அவ்வாறு படிக்கும் போது அதில் நான் விரும்பியது கணித சூத்திரங்களும், இயற்பியல் கொள்கைகளும்.அதற்கு காரணம், இப்பொழுது நினைக்கும் போது,அதன் அழகாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.

பித்தகோரஸ் theorem( இப்போது சாதாரணமாக சொன்னாலும்நவீன அறிவியலில் இதன் பயனில்லாத எதுவுமே இல்லைஇப்போ அனைவரும்  AI வரையில் பயன்படுத்தும் செயலிகளில் கூடபோன்றவை கொண்டிருக்கும் அழகு தான்என்னை அவற்றின் மேல் இழுத்தது

எந்த ஒரு கணித சூத்திரமாக இருந்தாலும் அதை step by step ஆக கொண்டு நிறுவுவது ஒரு பேரழகு.


அதன் அர்த்தங்கள், ஆழங்கள் ஒவ்வொரு ஸ்டெப்பிலும் கொஞ்சம் கொஞ்சமாக துலங்கி 

வரும். ஒன்றாம் ஸ்டெப்பில் எழுதுவதற்கும், பத்தாம்  ஸ்டேப்பில் வருவதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. அப்படி அடுத்து வருவதை எதிர்நோக்கி , ஒரு அடி வைத்து , புதியதாக  

உருபெற்று வரும் ஒன்றை உணர்வது உச்ச தருணம்.


எப்போதும் அடுத்து என்ன வரும் என்ற எதிர்பார்ப்பே அறிவுலகை வழி நடத்தி செல்கிறதுஅது எந்த துறையாக இருந்தாலும் சரி.அந்த அடுத்து என்பது புதியதுதூயதுஅது அங்கே என்றும் கண்ணுக்கு தெரியாமல் இருந்து கொண்டிருப்பதாக கூட இருக்கலாம்


ஒவ்வொரு எண்ணிற்கும் உள்ள உறவை ரசிப்பது போன்ற மகிழ்ச்சி ஏதுமில்லைஒவ்வொரு எண்ணும் நம்மிடம் பேசி விளையாடும்மறைந்திருக்கும் பொருளை கண்டு பிடிக்க அடிபோடும்அதே போல் ஒவ்வொரு எண்ணும் மற்ற எண்ணுடன் சேர்ந்து பிரிந்து மோதி விளையாடும்அப்படி அந்த எண்களின் விளையாட்டு தான் இந்த மொத்த பிரபஞ்சமும் என்ற தோன்றும.அனைத்திற்கும் பொதுவான சூத்திரத்தை கண்டு பிடிப்பது தானே ஒவ்வொரு அறிவியலாளனும் முயற்சிக்கும் லட்சியம்அப்படி ஒவ்வொன்றாககண்டுபிடித்து தான் நாம் இன்று AI வரைக்கும்  வந்துள்ளோம். இந்த ஒவ்வொறு step  by step என்பது logical reasoning. 


அப்படி அவ்வளவு சுலபமாக தர்க்கத்தை  வரையறை செய்ய முடியுமா என்னஅது கணிததிற்கோ மற்ற பாடங்களுக்கோ பொருந்தும்ஏனென்றால் அது அதனதன் பொதுவான விதிகளால் கட்டமைக்கப்படுகிறதுஆனால் நம் சிந்தனையைமொழியை அப்படி கட்டமைக்க 

முடியுமா? நம் சிந்தனை தான் சூத்திரமாக உருமாருகிறதாஅல்லது நம் சிந்தனை அதனை உருவாக்கும் ஒரு கருவி மட்டும்  தானா


நம் சிந்தனையும் அதுபோலதான்அடுத்து நாம் என்ன  யோசிக்கிறோம் என்பதை நாம் எப்படி அறிகிறோம்அப்படி நம்மால் நாம் அடுத்து செய்யும் 

செயலையோசொல்லையோ யூகிக்க முடியுமாஒரு சூத்திரத்தில் அடுத்தடுத்து துழங்கி 

வருவதும்ஒருகவிதையில் கற்பனையில் நிறைந்து செல்வதும் ஒன்றாகுமா? 

No comments:

Post a Comment